தாய்லாந்தில் நடைபெற்று வரும் மிஸ் யூனிவர்ஸ் 2025 போட்டியின்போது மேடையில் இருந்து மிஸ் ஜமைக்கா தவறி கிழே விழுந்ததால் பார்வையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் மிஸ் யூனிவர்ஸ் 2025 நடைபெற்று வருகிறது. 74வது மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் 130 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றுள்ளனர்.
தங்கள் நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் மிடுக்கான உடைகளை அணிந்து அழகிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தனர்.
இந்தியா சார்பில் ராஜஸ்தானை சேர்ந்த மணிகா விஸ்வகர்மா இந்த அழகி போட்டியில் பங்கேற்றுள்ளார்.
இந்தியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையிலான கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 மணிகா விஸ்வகர்மாவின் தேசிய உடை அணிந்து கலந்து கொண்டார்.
இதனிடையே போட்டியில் கலந்து கொண்ட கேப்ரியல் ஹென்றி என்ற மிஸ் ஜமைக்கா அழகி மேடையில் இருந்து கீழே விழுந்தார்.
இதையடுத்து அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
















