ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளை போலீசார் தீயிட்டு எரித்தனர்.
தனியார் எரியூட்டு நிறுவனத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான 1000 கிலோ கஞ்சா எரிக்கப்பட்டது.
கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமார் 35 கோடி ரூபாய் மதிப்பிலான ஏழாயிரம் கிலோ கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
















