பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் கியூபா நாட்டில் மின்னுற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இருளில் மூழ்கி உள்ளனர்.
கியூபாவில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிசக்தி பற்றாக்குறையை அந்நாட்டில் மின்வெட்டு அதிகரித்துள்ளது.
குறிப்பாகத் தலைநகர் ஹவானாவில் உள்ள தெருக்கள் மின்வெட்டால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
நாட்டின் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இறக்குமதி 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாகக் குறைந்துள்ளது.
ஹவானாவில் தினமும் பல மணிநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மட்டுமின்றி மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடுமையான பொருளாதார நெருக்கடியால் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இறக்குமதி மிக அதிகமாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் மின்உற்பத்தி நிலையங்களை முழு திறனுடன் இயக்க முடியாத நிலைக்குக் கியூபா தள்ளப்பட்டுள்ளது.
இதனால் இரவில் இருண்டு கிடக்கும் தெருக்களில் பயணிக்கப் பொதுமக்கள் அஞ்சுவதுடன் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
















