தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் யானை கோமதிக்கு முறையான பராமரிப்பு இல்லை என மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோமதி யானையின் உடல்நிலை குறித்து வனத்துறையினர் மற்றும் வன கால்நடை பராமரிப்பு குழுவினர் சோதனை செய்தனர்.
அப்போது, யானைக்கு அதிக நகங்கள் வளர்ந்து முறையான பராமரிப்பின்றி இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், நடைபயிற்சி, பசுந்தீவன உணவுகள், எடை குறைப்பு என யானையை பராமரிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தற்காலிக பாகனுக்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து பேசிய வன அலுவலர் ராஜ்மோகன், யானைக்கு முறையான பராமரிப்பு இல்லாததால், கோயில் நிர்வாகத்திற்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
















