வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக, கொல்கத்தா மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளிலும், நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து 50 கிலோ மீட்டார் தொலைவில் 5 புள்ளி 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியான நிலையில், கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
சில நொடிகள் நீடித்த நில அதிர்வால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இதேபோல மேற்கு வங்கத்தின் கூச் பெஹார், உத்தர் தினஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
















