கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அரசு குடியிருப்பில் வாடகை செலுத்தாத 20 வீடுகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஓசூர் எழில்நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இக்குடியிருப்பில் உள்ள சிலர், பல மாதங்களாக வாடகை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் வாடகை செலுத்தாத 20 வீடுகளில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வைத்து அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் பெண்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
















