மெக்சிகோவில் சுற்றுலாப் பயணிகள் சென்ற ஹாட் ஏர் பலூன் மரத்தில் சிக்கி கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மெக்சிகோவின் வடகிழக்கே அமைந்துள்ள சான் ஜுவான் தியோதிஹுகான் பகுதியில் ஹாட் ஏர் பலூனில் பலரும் உற்சாகமாகப் பயணித்து வருவது வழக்கம்.
இந்நிலையில் அண்மையில் ஹாட் ஏர் பலூன் தரையிறங்கும்போது நிகழ்ந்த இந்த விபத்தின்போது, அதில் பயணித்தவர்கள் மரக்கிளைகளில் மோதாமல் இருக்க கீழே குனிந்து உயிர் தப்பிய வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவில் ஹாட் ஏர் பலூனில் பயணித்தவர்கள் சிரிக்கும் சப்தமும் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து பலூனில் பயணித்த ரோக்ஸானா செவில்லா என்பவர் கூறியபோது, விபத்து நேரிட்ட தருணம் பயங்கரமாக இருந்ததாகவும், தற்போது அது வேடிக்கையாக மாறிவிட்டதாகவும் தெரிவித்தார்.
















