பெங்களூரு விமான நிலையத்தில் காப்ஸ்யூல் வடிவில் வைக்கப்பட்டு Sleeping Pods விமான பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் விமான பயணிகள் ஓய்வெடுப்பதற்காகக் கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் வகையில் காப்ஸ்யூல்கள் வடிவ Sleeping Pods எனப்படும் ஓய்வறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
விமான நிலையத்தின் டெர்மினல் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஓய்வறைகளில் 2 மணி நேரத்திற்கு ஆயிரத்து 300 ரூபாய் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
பார்ப்பதற்கு சிறிய அளவில் அனைவரையும் கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ள இந்த Sleeping Pods விமான பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
சிவா ராய் என்ற Vlogger வெளியிட்டுள்ள இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
















