நெல்லை தீயணைப்பு துறை அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனராகச் சரவண பாபு என்பவர் உள்ளார். என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அவரது அலுவலகத்தில் கடந்த 18ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சரவண பாபுவின் அறையில் இருந்து 2 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆனால், இந்தப் பணத்திற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் துணை இயக்குநர் சரவண பாபு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சோதனை நடைபெற்றதற்கு முந்தைய தினம், அவரது அறைக்குள் மர்மநபர் ஒருவர் செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
















