நீலகிரி மாவட்டம் உதகையில் மருத்துவமனை வளாகத்தில் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணி நடைபெறுவதால் கர்ப்பிணிகள் அவதியடைந்துள்ளனர்.
புளுமவுண்டன் பகுதியில் கர்ப்பிணிகள் சிகிச்சை பெறுவதற்கான சேட் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சாலை அமைக்கும் பணிகளால் சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிகளை நுழைவு வாயிலேயே இறக்கிவிட்டு செல்வதால் நடந்து செல்ல முடியாமல் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். எனவே, சாலைகளை விரைந்து அமைக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
















