சென்னை பெரம்பூரில் ரயிலில் கடத்திவரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவில் இருந்து சென்னை பெரம்பூருக்கு ரயலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக மதுவிலக்கு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரயில் நிலையத்தில் பார்சுலுடன் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்துச் சோதனையிட்டனர்.
அதில் 8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இம்ரான்கான், கார்த்திக்ராஜ், பூ பாண்டி ஆகியோரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையிலடைத்தனர்.
















