நீலகிரி மாவட்டம் பந்தலூரில் பேரவை தேர்தலைப் புறக்கணிக்க உள்ளதாகக் கூறி கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பந்துலூர் எம்ஜிஆர் நகரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி பலமுறை அதிகாரிகள், அரசியல் கட்சியினரிடம் மனு அளித்ததாகவும், ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
எனவே வரும் பேரவை தேர்தலைப் புறக்கணிக்க உள்ளதாகக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
















