திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் புதிதாகக் கட்டப்படும் தனியார் விடுதியில் மனித ரத்தக்கறை இருந்ததால் எஸ்பி நேரில் விசாரணை நடத்தினார்.
நிலாவூர் பகுதியில் கோபி என்பவர், தங்கும் விடுதியை கட்டி வருகிறார். கட்டடத்தின் கழிவறையில் ரத்தக்கறை இருந்ததால், ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த எஸ்பி சியாமளா தேவி, விசாரணை நடத்தினார். பின்னர் ரத்த மாதிரிகளை எடுத்த தடயவியல் நிபுணர்கள், அதனை ஆய்வுக்காகச் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
















