திருப்பரங்குன்றத்தில் நீதிபதி ஆய்வின்போது ட்ரோன் கேமரா பறந்த விவகாரத்தில் யூடியூபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மலையின் மீது திடீரென ட்ரோன் கேமரா பறந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பாகப் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த யூடியூப்பர் மணி என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அவர்மீது வழக்குப்பதிவு செய்து, ட்ரோன் கேமராவை பறிமுதல் செய்த போலீசார், அவரை ஜாமினில் விடுவித்தனர்.
















