திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பள்ளி மாணவியின் தற்கொலைக்குக் காரணமான இளைஞரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அலங்கியம் பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி, நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தி வந்ததால் பெற்றோர் கண்டித்ததாகவும் அதனால் கோபம் அடைந்த மாணவி விஷம் அருந்தித் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதலில் கூறப்பட்டது.
இந்தநிலையில் மாணவி இன்ஸ்டாகிராமில் கல்லூரி மாணவரை காதலித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனால் அவரின் மரணத்திற்கு சம்பந்தப்பட்ட இளைஞர்தான் காரணமென உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
















