நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று திருப்பூர் திரும்பிய மாற்றுத்திறனாளி மாணவனுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவினாசிலிங்கம் பாளையம் பகுதிய சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவரான சபரி ஆனந்த், ஐதராபாத்தில் நடைபெற்ற நேஷனல் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு நீச்சல் போட்டியில் 3 தங்க பதக்கங்களை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில், ஐதராபாத்தில் இருந்து ரயில் மூலம் சபரி ஆனந்த் திருப்பூர் வந்தடைந்தார். அப்போது, அவருக்குக் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
















