சென்னை, கிழக்கு தாம்பரம் ராஜ கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமிகளின் 79ம் ஆண்டு குருபூஜை விழா, கொடியேற்றத்துடன் மிகப் பிரமாண்டமாகத் தொடங்கியது.
சிறப்புச் சொற்பொழிவு ஆராதனை இன்னிசையுடன் தொடங்கிய இந்த விழாவில், இலவச இந்திய ஆட்சி ஆளுமை பணிக்கான பயிற்சி மையம் தொடங்கபட்டது.
இதனை கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் சபையின் செயற்குழு தலைவர் செந்தில்குமார் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்துகொண்டு சச்சிதானந்த சுவாமிகளின் ஆசிகளை பெற்றனர்.
















