காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தெப்போற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் திருக்குளத்தில் சுந்தராம்பிகை மற்றும் கச்சபேஸ்வரர் சுவாமிகள் அழகிய பட்டாடைகள், மலர் மாலைகள், திருவாபரணங்கள் சூடி தெப்பலில் எழுந்தருளினர்.
மிக அழகாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் மங்கல வாத்தியங்களுடன் ஏழு முறை கோயிலின் திருக்குளத்தில் வலம் வந்தனர்.
பிறகு மந்திரங்கள் ஓத தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
















