கரூர் வெண்ணெய்மலை கோயில் முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் தனது மகனுடன் யாசகம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த பிரபாகரன் என்பவர், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு பல மாதங்களாக வேலையில்லாமல் உள்ளார்.
இந்நிலையில், தனது சிறு வயது மகனுடன், கரூர் வெண்ணெய்மலை முருகன் கோயிலுக்கு வந்த பிரபாகரன், மரத்தடியில் அமர்ந்து யாசகம் எடுக்க முயன்றார்.
அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சக காவலர்கள், அதனை கண்டு அதிர்ச்சியடைந்து, பிரபாகரனை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர்.
















