கிருஷ்ணகிரியில் சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்ததுடன் கட்டாய மத மாற்றம் செய்த இஸ்லாமிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அருகேயுள்ள பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, அப்துல் கைப் என்பவர் காதலிப்பதாகக் கூறி, கடந்த மாதம் கடத்திச் சென்றார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து இருதரப்பினரையும் அழைத்துச் சமாதானம் பேசிய போலீசார், 18 வயது முடிந்தவுடன் திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி, அப்துல் கைப் உடன் சிறுமியை அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, மீண்டும் காவல் நிலையத்தில் புகாரளித்து தனது மகளை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இதையடுத்து பெற்றோர் விசாரித்தபோது, சிறுமியை அப்துல் கைப் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்ததும், பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மத மாற்றம் செய்திருப்பதும் தெரியவந்தது.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், விஷ்வ இந்து பரிஷித் அமைப்பினருடன் சேர்ந்து எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளித்தனர்.
















