மதுரையில் இந்துக்கள் சுடுகாட்டில் இஸ்லாமிய மக்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்த மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை ஆனையூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள சுடுகாட்டை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே, மாநகராட்சி நிர்வாகம் சுடுகாட்டின் ஒரு பகுதியை இஸ்லாமிய மக்களுக்கு ஒதுக்கீடு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, அப்பகுதியில் நீண்ட காலமாகச் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் இந்துக்களுக்கும், இஸ்லாமிய மக்களுக்கும் இடையே மோதலைத் தூண்டும் விதமாகச் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், மாநகராட்சி அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக்கூறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















