சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் பூரன் என்பவர், தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் சங்ககிரி அடுத்த வரதம்பட்டி பகுதியில் வசித்து வருகிறார்.
இவரது இளைய மகன் சித்தார்த் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தான்.
சிறுவனின் கூச்சல் சத்தம் கேட்டு வந்த பெற்றோல், சித்தார்த்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
















