திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசன வரிசையில் நாய் படுத்திருந்ததால் பக்தர்கள் அச்சமடைந்தனர்.
புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அண்ணாமலையாரை தரிசிக்க செல்லும் வரிசையில் நாய் ஒன்று படுத்துக் கிடந்தது.
இதனால் அச்சமடைந்த பக்தர்கள், நாய் கடித்துவிடுமோ என்ற பயத்துடன் சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. கோயிலில் நாய்கள் சுற்றித்திரிவதற்கு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் எனப் பக்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
















