சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் சாயப்பட்டறைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜாகீர் அம்மா பாளையத்தில் உள்ள ஜவுளி பூங்கா வளாகத்தில் 55 சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
17-வது நாளாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமாகச் சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், சாயப்பட்டறை திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள அலுவலக பகுதிகளில் போலீசார் முகாமிட்டுள்ளனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















