மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடப்பு ஆண்டுக்கான ‘மிஸ் யுனிவர்ஸ்’ உலக அழகிப் போட்டியில் மெக்சிகோவை பிரதிநிதித்துவப்படுத்திய ஃபாத்திமா போஷ் முடிசூட்டப்பட்டார்.
இந்த ஆண்டுக்கான ‘மிஸ் யுனிவர்ஸ் 2025’ இறுதிப்போட்டி தாய்லாந்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.
கடுமையான போட்டிகளுக்கு மத்தியில், ஃபாத்திமா போஷ் தனது புத்திசாலித்தனம், அழகு மற்றும் தன்னம்பிக்கையுடன் பதிலளித்து வெற்றி பெற்றார்.
ஃபாத்திமா போஷின் வெற்றிகுறித்து, மிஸ் யூனிவர்ஸ் போட்டியின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மிஸ் யூனிவர்ஸ் ஃபாத்திமா போஷுக்கு வாழ்த்துகள் என்றும், இந்தப் பயணம் பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும், மெக்சிகோவின் தனித்துவமான பிரகாசத்துடனும் இருக்கட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்தப் போட்டியில் தாய்லாந்து இரண்டாம் இடத்தையும், வெனிசுவேலா மூன்றாம் இடத்தையும், ஃபிலிப்பைன்ஸ் நான்காம் இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளது.
















