நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எஸ்.ஐ.ஆர். பணியை முழுமையாக ஆதரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நடைபெற்ற 61-வது எல்லை பாதுகாப்புப் படை எழுச்சி தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், தேசிய பாதுகாப்பிற்கு மட்டுமின்றி, நாட்டின் ஜனநாயக அமைப்பைப் பாதுகாப்பதற்கும் ஊடுருவலை தடுப்பது அவசியம் என்றார்.
எனினும் சில அரசியல் கட்சிகள் அரசாங்கத்தின் ஊடுருவல் எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பலவீனப்படுத்த முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
















