சிவகாசியில் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த இளைஞர்களை வேடிக்கை பார்த்துச் சென்ற நபர் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசியில் சாலையில் இரண்டு இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போல் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் அதனை வேடிக்கை பார்த்துவாறே சென்றுள்ளார்.
தொடர்ந்து முன்னாள் சென்ற பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
இடையூறு ஏற்படுத்தும் விதமாகச் சாலையில் ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















