ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் பூமிதான நிலத்தில் மணிமண்டபம் கட்டிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது.
அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் மணிமண்டபத்தை வரும் 26-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறிப் பூமி தான நிலத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரச்சலூர், ஜெயராமபுர பகுதிகளில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடைபெற்றது.
















