கோவை டாக்ஸி ஓட்டுநர் உதகை டாக்ஸி ஓட்டுநர்களால் தாக்கப்பட்ட விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுத்துத் தீர்வு காண சக டாக்சி ஓட்டுநர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
சூலூர் பகுதியைச் சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர் தங்கவேல் என்பவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு உதகையில் பயணிகளை இறக்கிவிட்டு கோவைக்குத் திரும்பியுள்ளார்.
அப்போது உதகையில் இருந்த கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வெளிமாவட்டங்களிலிருந்து உதகைக்கு வாடகைக்கு வரக் கூடாது எனக்கூறி தங்கவேலை தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த தங்கவேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இந்த சம்பவத்தைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுத்துத் தீர்வு காண வலியுறுத்தியும் கோவையை சேர்ந்த சக கால் டாக்ஸி ஓட்டுநர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
















