தஞ்சையில் குப்பைகளை தரம் பிரிப்பதில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தசை ஜெபமாலைபுரத்தில் 28 ஏக்கர் பரப்பில் மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் குப்பைகளை தரம் பிரிப்பதில் நடந்த முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக மனுதார் மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து குப்பை கிடங்கு மற்றும் ஸ்மார்ட் திட்டபணிகள்குறித்தத ஆவணங்களைஎடுத்துச் சென்றுள்ளதாகக தகவல் வெளியாகியுள்ளது.
















