திருவண்ணாமலை மாவட்டம் பருவதமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் உள்ள பருவதமலையில், மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில், நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வரும் 3ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளதால், மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கோயிலில் ஆய்வு செய்து, பக்தர்களுக்குரிய பாதுகாப்பு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
















