திருவண்ணாமலை மாவட்டம் வேளானந்தல் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்யாமல் மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வேளானந்தல் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, பள்ளியில் எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்யாமல் அதனை மேல்நிலைப் பள்ளியாகத் திமுக அரசுத் தரம் உயர்த்தியது.
தரம் உயர்த்தப்பட்டதாகக் கூறி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளியை திறந்து வைத்தார்.
பள்ளியில் கணினி அறை, ஆய்வகங்கள் இல்லை என வேதனை தெரிவிக்கும் பெற்றோர், அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
















