தஞ்சையில் போலி உரங்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்த வேளாண் அதிகாரி பணியி டமாற்றம் செய்யப்பட்டது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் உர விற்பனையில் நடக்கும் முறைகேடுகளை கண்டறிய வேளாண் உதவி இயக்குநர் எஸ்.செல்வராஜை மாவட்ட ஆட்சியர் நியமித்திருந்தார்.
அதன்பேரில் பல்வேறு பகுதிகளில் போலியான உரங்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்து கட்டுப்படுத்திய அதிகாரி, குடோன் ஒன்றில் இருந்து 31 ஆயிரம் கிலோ உரத்தைப் பறிமுதல் செய்தார்.
இது விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய நிலையில், அவர் திடீரெனப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
















