தனது பெயரில் புதிய முகநூல் பக்கத்தை உருவாக்கி, அதில் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்வதாக, திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த சிலர் மீது கோவை மாநகர சைபர் கிரைமில் பாஜக சிறுபான்மை அணியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில தலைவர் ஜான் பிலிப் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாகச் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் தான், இந்த செயலை செய்திருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
















