நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சேதமடைந்த பள்ளி கட்டடத்தைச் சீரமைத்து தர வேண்டுமெனப் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிபாளையம் அடுத்த விளாங்காட்டூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பள்ளிக் கட்டடம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சமாக உள்ளதென வேதனை தெரிவிக்கும் பெற்றோர், பள்ளி கட்டடத்தைச் சீரமைத்து தர வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















