Netflix-ன் புதிய உத்தி : தயாரிப்பாளர்கள் கலக்கம்!
Oct 10, 2026, 08:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

Netflix-ன் புதிய உத்தி : தயாரிப்பாளர்கள் கலக்கம்!

Murugesan M by Murugesan M
Nov 22, 2025, 01:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திரைப்படங்களை அதிக விலைக்கு வாங்கும் வழக்கத்தை மாற்றி, இனி அதிக வெப் சீரிஸ் மற்றும் ஒரிஜினல் தயாரிப்புகளை உருவாக்க முடிவெடுத்துள்ள Netflix நிறுவனத்தின் புதிய உத்தி, திரைப்படத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கோவிட் பெருந்தொற்று காலத்தில், OTT தளங்கள் பார்வையாளர்களை ஈர்ப்பதற்காகத் திரைப்படங்களை வரலாறு காணாத விலைக்கு வாங்கின. இது தயாரிப்பாளர்களுக்கு உடனடி லாபத்தைத் தந்தாலும், சினிமா சந்தையில் பல பின்னடைவுகளை உருவாக்கியது.

நடிகர்களின் சம்பளம் மற்றும் படங்களின் பட்ஜெட் தாறுமாறாக உயர்ந்ததுடன், தியேட்டர் மற்றும் சாட்டிலைட் உரிமைகளின் சந்தை மதிப்பு சரியத் தொடங்கியது. அதே சமயம், பெரிய விலைக்கு வாங்கப்பட்ட பல படங்கள் திரையரங்கில் தோல்வியைத் தழுவியதால், OTT தளங்களும் எதிர்பார்த்த பார்வையாளர்களை பெறாமல் பெரும் இழப்புகளைச் சந்தித்தன.

இந்த இழப்புகளின் காரணமாக, ஓ.டி.டி. தளங்கள் தற்போது படங்களை வாங்கும் உத்திகளைக் கடுமையாக்கியுள்ளன. பல நிபந்தனைகளைச் சேர்ப்பதுடன், ஒரிஜினல் படங்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், ஹைதராபாத்தில் பெரிய அலுவலகத்தைத் திறந்துள்ள Netflix, இனி வெளி தயாரிப்பாளர்களின் பெரிய படங்களை அதிக விலைக்கு வாங்குவதைக் குறைத்துக்கொண்டு, சொந்தமாக வெப் சீரிஸ் மற்றும் ஒரிஜினல் திரைப்படங்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக இருந்த Netflix-ன் இந்தக் கொள்கை மாற்றம், பெரிய படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களின் வருவாயை நேரடியாகப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், வெறும் எதிர்பார்ப்பு, நட்சத்திர கவர்ச்சியை மட்டுமே நம்பியிருக்காமல், உண்மையிலேயே தரமான படங்களை வழங்கும் தயாரிப்பாளர்களால் மட்டுமே இனி நிலைத்து நிற்க முடியும் என்ற புதிய யதார்த்தம் உருவாகியுள்ளது.

Tags: தயாரிப்பாளர்கள்Producers are worried about Netflix's new strategyNetflix-ன் புதிய உத்தி
Share
Tweet
SendShare
Previous Post

நெல்லை : இளைஞர் தற்கொலை – ஒன்றிய கவுன்சிலர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு!

Next Post

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை நிராகரித்தார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

Related News

ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்க தீவிரம் : புதிய பொருளாதார தடைகள் அறிவித்த அமெரிக்க அரசு – சிறப்பு தொகுப்பு!

அரசியலமைப்பை சீர்குலைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ராகுல் காந்திக்கு நிதின் நபின் எச்சரிக்கை!

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? – ராம் மாதவ் கேள்வி!

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்; தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி

நகோம் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வெற்றி

Load More

அண்மைச் செய்திகள்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

மகாளய அமாவாசை – நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

இன்றைய தங்கம் விலை!

உலக சந்தைக்கு டீசல் வழங்க ரஷ்யா ஒப்புதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

பிரதமர் மோடி சென்னை வருகை – தமிழக பாஜக சார்பில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சி!

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 23 வரை நீட்டிப்பு!

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி – பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!

இடைத்தேர்தல் வெற்றி மூலம் தவெக ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர் – செங்கோட்டையன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies