தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விமானி பயிற்சி நிலையம் அமைக்கத் தனியாருக்கு, ‘டிட்கோ’ நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
தோணுகால் கிராமத்தில் உள்ள மொட்டை மலை அடிவாரத்தில் 1.2 கிலோமீட்டர் நீளமும் 15 மீட்டர் அகலமும் கொண்ட ஓர் விமான ஓடுதளம் அமைந்துள்ளது.
இதனை, கோவையைச் சேர்ந்த தனியார் நிர்வாகம் பயன்படுத்தி வந்த நிலையில், 1998ஆம் ஆண்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் விமானி பயிற்சி நிலையம் அமைக்கத் தனியாருக்கு ‘டிட்கோ’ நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
இதற்காக, 31 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்படும் இடத்தில் தனியார் நிறுவனம், தன் செலவில் பயிற்சி நிலையத்தை அமைத்து, பராமரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அதை அமைக்கும் நிறுவனம் ஈட்டும் வருவாயில், ஒரு பங்கை, டிட்கோவுக்கு தர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















