பாகிஸ்தானின் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் அசிம் முனீர்-ஐ கடுமையாக விமர்சித்து, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் பேசியதாகக் கூறப்படும் ஒரு ஆடியோ பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகி, பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.
சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில், எந்த ஒரு தலைமை தளபதியும் ஆசிம் முனீரை போல அவமதிக்கப்பட்டதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பதவிக்கு இருந்த மரியாதை காரணமாக மக்கள் தலைமை தளபதியின் பெயரைக் கூட உச்சரிக்க மாட்டார்கள் என்றும், ஆனால் இது எதனால் நடக்கிறது என்று தெரியவில்லை எனவும் பேசப்பட்டுள்ளது.
இந்த ஆடியோவின் நம்பகத்தன்மை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், பாகிஸ்தானில் ராணுவ அமைப்புக்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வரும் அதிருப்தியை இது பிரதிபலிக்கிறது.
பணவீக்கம் மற்றும் வேலையின்மை காரணமாக பாகிஸ்தான் பொருளாதாரம் தொடர்ச்சியாக சந்திக்கும் வீழ்ச்சி போன்ற காரணிகளே அசிம் முனீர் இவ்வாறு விமர்சிக்கப்படுவதற்கு காரணம் என கூறப்படுகிறது.
















