அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நியூயார்க் மேயர் மம்தானியை தட்டிக் கொடுத்து இணக்கமாகப் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக மம்தானி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் ஒரு பாசிஸ்ட் என மம்தானியும், மம்தானி ஒரு கம்யூனிஸ்ட் என டிரம்ப்பும் மாறி மாறி விமர்சித்தனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூயார்க் நகர மேயர் மம்தானியை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பிற்குப் பின் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது நீங்கள் இன்னும் டிரம்ப்-ஐ பாசிஸ்ட் எனக் கருதுகிறீர்களா எனப் பத்திரிகையாளர் ஒருவர் மம்தானியிடம் கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட டிரம்ப், நீங்கள் என்னைப் பாசிஸ்ட் எனத் தொடர்ந்து அழைத்தாலும் பரவாயில்லையென, மம்தானியை தட்டிக் கொடுத்து இணக்கமாக நடந்து கொண்டார்.
















