செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்ட ஒரு லட்சத்து 66 ஆயிரம் ரொக்கத்தை இருவர் திருடிச் சென்ற காட்சி வெளியாகி உள்ளது.
திருப்போரூரை சேர்ந்த ஜெனித் யுவராஜ், வங்கியில் நகைகளை அடகு வைத்துவிட்டு ஒரு லட்சத்து 66 ஆயிரம் ரொக்கத்தை , இருசக்கர வாகன பெட்டியில் வைத்துள்ளார்.
பின்னர் அங்குள்ள மளிகை கடை முன்பு வாகனத்தை நிறுத்திய அவர், சாவியை எடுக்காமல் சென்றுள்ளார். பின்னர் வந்துபார்த்தபோது பணம் திருடுபோனது தெரியவந்தது.
அங்குள்ள சிசிடியை ஆய்வு செய்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், பணத்தை லாவகமாகத் திருடிச்சென்ற காட்சி பதிவாகி உள்ளது.
















