திருச்சி மாவட்டம் பகளவாடியில் பயனாளியிடம் விஏஓ, தகாத வார்த்தையில் பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுராபுரி பகுதியை சேர்ந்த முபாரக் என்பவர் வீட்டு மனை பட்டா தொடர்பான சந்தேகத்திற்கு விஏஓ மதுபாலனை, செல்ஃபோன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது விஏஓ மதுபாலன், முபாரக்கை தகாத வார்த்தையால் திட்டி, அலட்சியப்படுத்தி உள்ளார். இது தொடர்பான ஆடியோவுடன் முபாரக், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
















