இளையான்குடி முன்னாள் எம்எல்ஏ-வுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்கக் கோரிய மனு மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில், கடந்த 2009ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுகவை சேர்ந்த மதியரசன் வெற்றி பெற்றார்.
இவர் தனக்கு ஓய்வூதியம், பிற பலன்களை வழங்கக் கோரி, தமிழக அரசிடம் விண்ணப்பித்திருந்தார்.
அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால், அவர் சென்னை உயர்நீதின்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், முன்னாள் எம்எல்ஏவின் மனுவை 6 வாரங்களில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
















