சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற எஸ்ஐஆர் முகாமில் திமுகவினர், பொதுமக்களின் ஆதார் நகலை சட்டவிரோதமாகப் பெற்றதாக கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில், SIR படிவங்களை நிரப்பும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்று, பொதுமக்களின் படிவங்களை பூர்த்தி செய்தனர்.
இந்தநிலையில் திமுகவினர், பொதுமக்களின் ஆதார் நகலை சட்டவிரோதமாகப் பெற்றதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கிருந்த அதிமுகவினர், பொதுமக்களின் ஆதார் நகலை எப்படி பெறுவீர்கள் எனக் கூறி அவர்களுடன் வாக்குவாதத்ததில் ஈடுபட்டனர்.
பதிலுக்குத் திமுகவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக இருதரப்பினரும் மாறி, மாறிக் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகார் மனுவை பெற்ற போலீசார், தேர்தல் அதிகாரிகளிடம் விளக்கம் பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
















