திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், கருவில் உள்ள குழந்தையின் ஊனத்தை பெற்றோரிடம் மறைத்த மருத்துவ பரிசோதனை மையத்திற்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சம்பந்தப்பட்ட நிறுவனம், வயிற்றில் குழந்தை ஊனமாக இருப்பது தெரிந்தும் தன்னிடம் கூறவில்லை எனவும் பணத்தை பறிக்கும் நோக்குடன் செயல்பட்ட பரிசோதனை மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புவனேஷ்வரி என்பவர் சுகாதாரத்துறையிடம் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து விசாரணை நடத்திய அதிகாரிகள் விதிமீறல் நடைபெற்றது உறுதியானதை அடுத்து, அந்த மையத்திற்கு சீல் வைத்தனர்.
















