கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவிய போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
டிசம்பர் 3ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுவதை ஒட்டி, இப்போட்டியை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று, பல்வேறு வகையிலான ஓவியங்களை வரைந்து அசத்தினர். வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழும், ரொக்கமும் வழங்கப்பட்டன.
















