பால் உற்பத்தியாளரை அமைச்சர் மனோ தங்கராஜ் தொலைத்து விடுவேன் என மரியாதை குறைவாகப் பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பாண்டியராஜபுரம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பால் உற்பத்தியாளர்கள் கொண்டு வந்த பாலின் தரத்தை ஆய்வு செய்த அமைச்சர் மனோ தங்கராஜ், பாலின் தரத்தைக் கணக்கீடு செய்து, உரிமையாளர்களுக்கு உடனடியாக ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கண்டிப்புடன் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, குலசேகரன்கோட்டையில் உள்ள விவசாயிகளின் மாட்டுப் பண்ணைக்கு நேரடியாகச் சென்ற அவர், ஆய்வுகளை மேற்கொண்டார்.
அப்போது, மாடு வாங்குவதற்கு வங்கிக் கடன் கேட்ட நபரிடம் தொலைத்து விடுவேன் என மரியாதை குறைவாகப் பேசினார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
















