தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரைமணி நேரத்திற்கும் மேலாகப் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
காற்றழுத்தத் தாழுவு பகுதி உருவானதை தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் திருவேங்கடம் சாலையில் மழை நீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழை நீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசியதால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டது.
எனவே மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து செயல்படுத்தி, மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















