டெல்லி கார் குண்டு வெடிப்பு சதித் திட்டத்தை விசாரித்து வரும் அதிகாரிகள், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு காஷ்மீரில் உள்ள மருத்துவமனைகளை ரகசிய ஆயுதக் கிடங்குகளாக மாற்ற முயற்சித்ததா? என விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட மருத்துவர் ஆதில் அகமது ராதரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அனந்த்நாக், ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் நச்சு ஆயுதங்கள் உள்ளிட்ட வெடிபொருட்களை பதுக்கி வைப்பதற்கான மறைவிடங்களாக, தீவிரவாத குழுக்கள் ஆய்வு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
மருத்துவப் பணியாளர்களின் போர்வையில் இந்தச் செயல்களைச் செய்து, பாதுகாப்புப் படைகளின் சந்தேகத்தில் இருந்து தப்பிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்தச் சதித்திட்டம், மருத்துவர்கள் மற்றும் உயர் கல்வி கற்றப் பல தொழில் வல்லுநர்கள் அடங்கிய ஒரு “வெள்ளை காலர்” பயங்கரவாத வலைப்பின்னலை வெளிப்படுத்தியுள்ளது.
முன்னதாக, ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக் கழகத்தில் இருந்து வெடிபொருள் தயாரிப்பதற்கான பெரிய அளவிலான மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தக் குழுவுக்கு ஹமாஸ் அமைப்பிலிருந்து ஏதேனும் தொழில்நுட்ப ஆதரவு கிடைத்ததா என்பது குறித்தும் NIA அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
















