திருச்சியில் நடைபெற்ற S.I.R படிவம் தொடர்பான விளக்கக் கூட்டத்தில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் S.I.R படிவம் தொடர்பான விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து SIR படிவம் குறித்த தகவல்களை பொது மக்களுக்குப் பாஜக நிர்வாகிகள் எடுத்துரைக்க வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தினர்.
மேலும் சட்டமன்ற தேர்தல் பணிகளை பாஜக நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
















