மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் ஓடும் ரயிலில் கெட்டில் மூலம் நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்ட பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே துறை கூறியுள்ளது.
மும்பையில் ரயிலின் ஏசி பெட்டி ஒன்றில் பயணித்த பெண் ஒருவர், அங்கிருந்த மொபைல் சார்ஜர் பாயிண்ட்டில் கெட்டிலை சொருகி நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டார்.
இதுகுறித்த வீடியோ சக பயணிகளால் எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட நிலையில் வைரலானது.
வீடியோவைக் கண்ட பலரும் சம்பந்தப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
இதனை கவனத்தில் கொண்ட ரயில்வே நிர்வாகம், சம்பந்தப்பட்ட பெண் மீது ரயில்வே சட்டம் 147 பிரிவு 1-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், ஓடும் ரயிலில் கெட்டிலை பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும் எனச் சம்பந்தப்பட்ட பெண்ணின் புகைப்படத்தைப் பயன்படுத்தி விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
















